திருக்குறளும் திருவள்ளுவரும் முக்கிய குறிப்புகள்
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
திருவள்ளுவரின் காலம் கி.மு 31
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்தவ ஆண்டு (கி.பி) + 31 திருவள்ளுவர் ஆண்டு
எ.கா : தற்போதைய ஆண்டு (2022) + 31 = 2053
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், செந்நாப்போதார், தேவர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர்.
திருக்குறளின் வேறு பெயர்கள்: முப்பால், உத்திரவேதம், பொய்யாமொழி, தமிழ் மறை, திருவள்ளுவம், வாயுறைவாழ்த்து, பொதுமறை.
திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். பரிமேலழகர் உரையே சிறந்தது.
திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குடவர், நச்சர், பரிமேலழகர் காலிங்கர், மல்லர்.
விக்டோரிய மகாராணி கண் விழித்ததும் காலையில் படிக்கும் முதல் திருக்குறள்.
திருக்குறள் 7 சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
133 அதிகாரம் 1330 குறள்களை கொண்டுள்ளது திருக்குறள் ஆகும்.
அறத்துப்பால் - 38 அதிகாரம்.
பொருட்பால் - 70 அதிகாரம்.
காமத்துப்பால் - 25 அதிகாரம்.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ஜி.யு. போப்.
தமிழக அரசு தைத் திங்கள் 2ஆம் நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
தமிழ் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை திருக்குறளின் பெருமையை போற்றிப் புகழ்கிறது.
உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் முன்னோடி புறநானூறு
திருக்குறளின் விளக்கம் நாலடியார்
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
Comments
Post a Comment