1. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஹரியானா
2. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல்
3. மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட்
4. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது? தேனிரும்பு
5. புரதச்சத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ? அமினோ அமிலத்தினால்
6. ஒரே ஒரு ரயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம்? நாகலாந்து.
7. உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம்? ராமேஸ்வரம்.
8. டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது,
9.தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு ஆகும்.
10. இராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்த ஆண்டு - 1828
11. நாட்டிய மங்கையின் வெங்கல உருவச்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள நகரம் - மொகஞ்சதாரோ
12. இந்தியாவின் எந்த மாநிலம் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது - உத்திரபிரதேசம்
13. இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு - 1990
14. சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் - ஆஷான்
15. எந்த ஆண்டு இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது - 1928
16. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் - உச்சநீதிமன்ற நீதிபதி
17. நர்மதை, தபதி நதிகளுக்கிடையே காணப்படும் மலை - சாத்பூரா மலைகள்
18. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது - பேட்மின்டன்
19. மாநிலத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர்- தலைமைத் தேர்தல் அதிகாரி
20. 1916-ம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையார் ஹோம்ரூல் இயக்கத்தை தோற்றுவித்த இடம் - சென்னை
21. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி - ஆரதிசாகா
22. இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் - தில்லி
23. நமது நாட்டின் பழம் பெரும் சமயம் - வேத சமயம்
24. தேம்பாவணியோடு தொடர்புடைய மதம் - கிறிஸ்துவ மதம்
25. வடகிழக்கு பருவக்காற்று காலம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
26. சூரிய ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நேரம் - 8.3 நிமிடங்கள்
27. இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது - கொல்கத்தா
28. யுரேனியம் எந்த மாநிலத்தில் கிடைக்கிறது - ஜார்கண்ட்
29. உலகிலேயே பெரிய மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - சுந்தரவனம்
30. ஜவர்ஹர்லால் நேரு பிறந்த ஊர் - அலாகாபாத்
31. தமிழ்நாட்டின் இரும்பு நகரம் - சேலம்
32. இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது - அனல்மின்நிலையம்
33. ஆக்டோபசுக்கு எத்தனை இருதயங்கள் காணப்படுகின்றன - மூன்று
34. வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த ஆண்டு - 1564
35. பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி
36. The Primary Classical Language of the World என்ற நூலை எழுதியவர் - தேவநேயபாவாணர்
37. தமிழ்தாத்தா என அழைக்கப்படுபவர் யார் - உ.வே.சாமிநாத அய்யர்
38. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்கள் எத்தனை - 25
39. பகவத்கீதை 55 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுஉள்ளது.
40.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா.
41. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது பேரீச்சை மரம்.
42. 1900 ஆம் ஆண்டு முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்.
43. ஒரு தேனீயால் ஒரே ஒரு முறைதான் கொட்ட முடியும்.
44.சிந்தி மொழியில் ஹரப்பா என்றால் புதையுண்ட நகரம் என்று பொருள்.
45.குப்த வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர்
46. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் நிறுவப்பட்டது.
47.முகலாய பேரரசை நிறுவியவர் - பாபர்
48. கொரில்லா போர் முறை - மறைந்திருந்து தாக்குதல்
49.விஜயநகரம் என்றால் வெற்றியின் நகரம் என்று பொருள்
50.இந்தியாவின் தெற்குப்பகுதி தக்காணம் அல்லது தட்சணபதம் என அழைக்கப்படுகிறது.
51. சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டவர் - முதலாம் குலோத்துங்க சோழன்
52. அர்த்தசாஸ்திரம் என்ற நூல் மௌரியர்களின் ஆட்சி முறை குறித்த தகவல்களை தருகிறது.
53.பண்படு என்ற தமிழ் சொல்லில் இருந்தே பண்பாடு என்ற சொல் உருவானது.
Comments
Post a Comment