திருக்குறளும் திருவள்ளுவரும் முக்கிய குறிப்புகள் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர் . திருவள்ளுவரின் காலம் கி.மு 31 திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்தவ ஆண்டு (கி.பி) + 31 திருவள்ளுவர் ஆண்டு எ.கா : தற்போதைய ஆண்டு (2022) + 31 = 2053 திருவள்ளுவரின் வேறு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், செந்நாப்போதார், தேவர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர். திருக்குறளின் வேறு பெயர்கள் : முப்பால், உத்திரவேதம், பொய்யாமொழி, தமிழ் மறை, திருவள்ளுவம், வாயுறைவாழ்த்து, பொதுமறை. திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது. திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். பரிமேலழகர் உரையே சிறந்தது. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குடவர், நச்சர், பரிமேலழகர் காலிங்கர், மல்லர். விக்டோரிய மகாராணி கண் விழித்ததும் காலையில் படிக்கும் முதல் திருக்குறள். திருக்குறள் 7 சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.